(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு

மட்டக்களப்பில் பதவிநிலை அரச உத்தியோகத்தர்களுக்கான அரசகரும மொழி சிங்களத்தில் தேர்ச்சி பெற்றுக் கொள்வதற்கான பயிற்சிப்பட்டறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் நடாத்தப்பட்டுவரும் அரசகரும மொழித் தேர்ச்சிக்கான சிங்கள மொழியினைப் பயிற்றுவிக்கும் பயிற்சிப்பட்டறை மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில்  (14) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரனின் ஏற்பாட்டில் இடம்பெறும் இப்பயிற்சி நெறியானது மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்கள், நிறுவாக அலுவலகங்கள், கல்வி திணைக்கள அலுவலகங்கள், விவசாயம், மற்றும் நீர்பாசன திணைக்களங்ளில் கடமைபுரியும் பதவிநிலை உத்தியோகத்தர்கள் 80 பேருக்கு அரச கருமமொழி சிங்களத்தில் தேர்ச்சியினைப் பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இப்பயிற்சி நெறியானது 200 மணித்தியாலங்களைக் கொண்ட சிங்களம் மட்டம் 1 இற்கான தேர்ச்சியினைப் பெற்றுக் கொள்ளக்கூடியவாறு தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பயிற்சி நெறியினை வெற்றிகரமாக பூர்த்தி செய்வதனூடாக அரச உத்தியோகத்தர்கள் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டிய தகைமையாகிய அரசகரும மொழி சிங்களத்தில் தேர்ச்சி பெற்வராகக் கருதப்படுவர். 

அரச கரும மொழித்திணைக்கள மாவட்ட இணைப்பாளர் வீ. சந்திர குமாரின் ஒருங்கிணைப்புடன் இடம்பெறும் இவ்வாரம்ப நிகழ்வில் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி பிரசாத் ஆர். ஹேரத், உதவிப் பணிப்பாளர், பஷ்மிலா ரவிராஜ், கல்வி மற்றும் ஆய்வு உத்தியோகத்தர் ரிட்மா லன்சகார, பாட இணைப்பாளர் கல்யானி உட்பட சிங்கள மொழி பயிற்றுவிப்பாளர்களான திரு மாணிக்கவாசகம், திலினிமதுசங்க மற்றும் பயிற்சியாளர்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours