(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
இம்மாவட்டத்திலிருந்து கொரோனா மற்றும் டெங்கு நோய்களினைக் கட்டுப்படுத்தும் முகமாக பொதுமக்கள் சுகாதார நடவடிக்கைகளை முழுமையாகப் பின்பற்றுவதற்கும், விசேட வழிப்புணர்வு செயற்றிட்டங்களை மாவட்டம் முழுவதும் நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மட்டக்களப்பு மாவட்ட செயலகம், மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் படையினருடன் இணைந்து மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் மேற்கொண்டுவருகின்றது.
அதற்கமைவாக பொது இடங்கள் மற்றும் அரச நிறுவனங்கள் போன்ற இடங்களில் சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்திருக்க வாராந்த சிரமதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஜீ.சுகுணன் அவர்களது தலைமையில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக வளாகம் நேற்று (12) திகதி
சிரமதான நடவடிக்கை மூலம் சுத்தம் செய்யப்பட்டது.
இதன்போது மட்டக்களப்பு பிராந்திய
சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் கடமையாற்றும் அதிகளவிலான உத்தியோகத்தர்கள் இச்சிரமதான நடவடிக்கையில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு அலுவலக வளாகத்தினையும் அலுவலக சுற்றுச்சூழலையும் சுத்தம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் கொவிட் 19 சுகாதார வழிமுறைகளை மக்கள் முழுமையாக பின்பற்றி நடப்பதுடன், டெங்கு நுளம்பு பரவலில் இருந்தும் அவதானமாக இருக்க வேண்டுமென
Post A Comment:
0 comments so far,add yours