(எஸ்.அஷ்ரப்கான்)


தென்கிழக்குப் பல்கலைக்கழகம் என்ற தாயின் சுய கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும், அதற்கு கட்டுப்பட்டு ஒரு குடும்பம் போல் அனைவரும் செயற்பட வேண்டும் என உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர் தெரிவித்தார். 

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் 22 வது வருடாந்த பொதுக்கூட்டம்,  (24) எம்.எம்.நெளபர் தலைமையில், பல்கலைக்கழக மாநாட்டு மண்டபத்தில்  இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக  பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
 
கைவிரல் அடையாளப் பதிவு இயந்திரத்தை அனைவருக்கும் பொருத்தமான இடமான பல்கலைக்கழக பிரதான நுழைவு வாயிலிலேயே பொருத்தப்பட்டதையிட்டு மிகவும் சந்தோச மாகவுள்ளது.

என்னுடைய பதவிக் காலத்தில் பல திட்டங்களை அடைய வேண்டும், புதிய பீடங்கள், புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்படவேண்டும், பல்கலைக்கழகம் சர்வதேச தரத்துக்கு உயர்த்தபட வேண்டும், மற்றும் பல்கலைக்கழகத்தின் தரத்தை உயர்த்தப் பட வேண்டும், இலங்கையில் உயர்ந்த பல்கலைக் கழகமாக இந்த பல்கலைக்கழகத்தை கொண்டுவரவேண்டும். ஆகவே அபிலாசைகளை நிறைவேற்ற ஒன்றிணைவது அனைத்து தரப்பினரும் பொறுப்பாகும்.

மேலும் நடைமுறை மற்றும் இலக்குகளை அடையக்கூடிய அணுகுமுறைகளுடன் முன்னோக்கிச் செல்வதன் மூலம்  பல்கலைக் கழகத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும். கல்விசாரா உத்தியோகத்தர்களுக்கான தேவையான சகல பயிற்சிப் பட்டறைகளையும் செய்து கொடுக்குமாறு பணிப்பாளருக்கு நான் பணித்துதிருக்கின்றேன்.
ஊழியர்களின் திறமைக்கு ஏற்ப எதிர்காலத்தில் பதவி உயர்வுகளும் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

ஊழியர் சங்கத்தின் தலைவர் எம்.எம்.நெளபர்  மற்றும் நிர்வாக சபையின் உறுப்பினர்கள் இணைந்து உபவேந்தர் அவர்களுக்கு நினைவு சின்னம் ஒன்றையும் கையளித்தனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours