(க.விஜயரெத்தினம்)


மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்திற்குட்பட்ட திராய்மடு பகுதியிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை(4)காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திராய்மடு,முருகன் ஆலயத்திற்கு அருகில் உள்ள காணியொன்றிலிருந்தே குறித்த சடலம் மீட்கப்பட்டதுடன் குறித்த நபர் பயணித்ததாக நம்பப்படும் மோட்டார் சைக்கிளும் அருகிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லையென தெரிவித்த பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த பகுதிக்கு சென்ற மாவட்ட குற்றத்தடயவியல் பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருவதோடு குறித்த சடலத்தை பொலிசார் நீதிபதியின் அனுமதியுடன் மீட்டெடுத்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றார்கள்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours