(காரைதீவு  நிருபர் வி.ரி.சகாதேவராஜா)

லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சைகள் கண் மருத்துவ அறுவை சிகிச்சைகள் பொது அறுவை சிகிச்சைகள், எலும்பியல் ,சிறுநீரகம், மகளிர் மற்றும் மகப்பேறு அறுவை சிகிச்சைகள் 35 க்கும் மேற்பட்ட சேனலிங் சேவைகள்  மற்றும்  எங்களிடம் எண்டோஸ்கோபிஇ டிரெட்மில் அழுத்த சோதனை எக்கோ அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் எக்ஸ்ரே வசதிகள் உள்ளன. குறைந்த செலவில் உயர்தர சேவைகளை வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ளோம்.
இவ்வாறு டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பணிப்பாளரும் தவிசாளருமான உரிமையாளருமான  வைத்தியநிபுணர் டாக்டர் றிஷான் ஜமீல் தெரிவித்தார்.
37வருடகாலமாக கல்முனைக்குடியில் வைத்தியசேவையாற்றிவரும் டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த  வைத்தியசாலையின் கிளை வைத்தியசாலையான டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த சாய்ந்தமருது வைத்தியசாலையின்  திறப்பு விழா வெள்ளியன்று நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
விழாவில் பிரதமஅதிதியாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர். எம்.தெளபீக் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வைத்தியசாலையை திறந்துவைத்தார்.
இந்த திறப்பு விழா நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் சாய்ந்தமருது வைத்தியசாலை வைத்திய அதிகாரி டாக்டர் சனூஸ் காரியப்பர் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி. ஜெயசிறில் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.முனீர் ஆகியோர் மேடையில் முன்னிலை அதிதிகளாகக்கலந்து உரையாற்றி சிறப்பித்தார்கள்.
அங்கு டாக்டர் றிஷான்ஜமீல் மேலும் பேசுகையில்:
எனது தந்தையார் டாக்டர் ஏ எல் எம் ஜமீல் அவர்களால் தொடங்கப்பட்ட இவ்வைத்தியசாலை கடந்த 37 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. செவிலியராக ஆரம்பித்து 10000 க்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றெடுத்தது.
தற்போது புதுப்பிக்கப்பட்டு புதிய அமைப்புகள் மற்றும் பலநவீன சேவைகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. குறைந்த செலவில் உயர்தர சேவைகளை வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ளோம். தற்போது எங்களின் டுளுஊளு செலவு மூலதன விலையில் கிட்டத்தட்ட 1ஃ3 ஆகும்.
எதிர்காலத்தில்  ஆர்த்ரோஸ்கோபிக் அறுவை சிகிச்சைகள் நுவு அறுவை சிகிச்சைகள் கேத் லேப் ஊவு ஸ்கேன் வசதிகள் போன்றவற்றை நிறுவ தயாராகி வருகின்றோம். அனைத்திற்கும் மககளின் ஆதரவு ஒத்துழைப்பு மிகவும் தேவை.
நான் உழைப்பதற்காக இதனை நிறுவவில்லை. நானும் எனது குடும்பமும் லண்டனில் வாழ்கிறோம்.கட்டாரில் சேவைசெய்கிறோம். எனக்கு உழைக்கவேண்டுமென்ற தேவை இல்லை. இருந்தும் இன்றைய பொருளாதாரநெருக்கடிமிகுந்த நாட்டுச்சூழ்நிலையிலும் இத்தகையதொரு சேவையினை எமது மக்களுன்னு வழங்கவேண்டும் என்ற உயரியநோக்கில்தான் இதனைச்செய்திருக்கிறேன். உண்மையில் இதற்காக இட்ட கோடிக்கணக்கான ருபாக்களை மீளப்பெறுவதானால் குறைந்தது 15வருடங்களுக்கு மேல்செல்லும்.அதனையிட்டு நான்கவலைகொள்ளவில்லை. எமது மக்கள் மட்டக்களப்பு கொழும்பு என்று அலையாமல் அவர்களுக்கான சுகாதாரசேவையினை காலடியில் வழங்கவேண்டும். அதன்விளைவே இது என்றார்.
விழாவில் அரசியல்பிரமுகர்கள் வைத்திய அதிகாரிகள் பிரதேச முக்கியஸ்தர்கள் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலை கல்முனை மற்றும் சாய்ந்தமருது வைத்தியசாலைகளின் பொது முகாமையாளர்கள் நிர்வாகிகள் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours