நூருல் ஹுதா உமர்
இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி வைத்தியர் ஐ.எல்.எம். றிபாஸ் கலந்து கொண்டதுடன் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் கௌரவ அதிதியாகக் கலந்து கொண்ட இந்நிகழ்வில், சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின், பிரதேச வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச்.கே. ஸனூஸ் காரியப்பர் விஷேட அதிதியாகவும் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் அதிதியாகக் கலந்து சிறப்பித்த, பிரிவின் மேக நோயியியல் விஷேட வைத்திய நிபுணர், வைத்தியர் கே.ஏ.சி.ஆர். விஜேசேகர மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்வதை இட்டும், இப் பிராந்தியத்திற்கு ஆற்றிய அளப்பரிய சேவைகளை நினைவு கூர்ந்தும் பாராட்டி கௌரவிக்கப்பட்டார். அத்தோடு முன்னாள் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக பணியாற்றி கல்முனை பிராந்தியத்திற்கு எண்ணற்ற சேவைகள் செய்து மட்டக்களப்பிற்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற வைத்தியர் கு. சுகுணன், பிரிவிலிருந்து அண்மையில் ஓய்வு பெற்றுச் சென்ற பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.எம்.ஜமான் ஆகியோரும் இந்நிகழ்வில் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.
Post A Comment:
0 comments so far,add yours