கே.எஸ்.கிலசன்

நாவிதன்வெளி எதிரொலி விளையாட்டு கழகத்தின் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி கடந்த சில வாரங்களாக இடம்பெற்று வந்தது. இச் சுற்றுத் தொடர் 54 அணிகளின் 
பங்குபற்றலுடன் சிறப்பான முறையில் ஆரம்பமானது. இதன் இறுதி போட்டியானது 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை 15ம் கிராமம் பாமடி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. 

இறுதி போட்டியில் மண்டூர் அருள்மணி விளையாட்டு கழகமும் சம்மாந்துறை எஸ்.ரீ.ஆர் விளையாட்டு கழகமும் பலப்பரீட்சை நடாத்தின. அதில் வெற்றியீட்டி 2022 இற்கான வெற்றி கிண்ணம் மற்றும் 20,000 ரூபாய் பணப் பரிசிலை மண்டூர் அருள்மணி  விளையாட்டுக் கழகமும் இரண்டாம் இடத்திற்கான கிண்ணம் மற்றும் 10,000 ரூபாய் பணப் பரிசிலை சம்மாந்துறை  எஸ்.ரீ.ஆர்  விளையாட்டுக் கழகமும் பெற்றுக் கொண்டது. தொடரின் ஆட்ட நாயகனாக எஸ்.ரீ.ஆர் அணியின் சாஜித் அவர்களும் இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாக அருள்மணி  விளையாட்டு கழகத்தின் விஜயராஜா அவர்களும்  தெரிவு செய்யப்பட்டனர்.

இந்த சுற்று தொடருக்கான இறுதி நிகழ்வின் பிரதம அதிதியாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் அவர்களும் சிறப்பு அதிதிகளாக நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையின் அதிபர் என்.பாலசிங்கம் உடற்கல்வி ஆசிரியை திருமதி.ரூபன் இந்து மத மதகுரு சுபாஷ்கர் சர்மா மற்றும் ஆலய பரிபாலன சபையினர் விளையாட்டு கழகத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த போட்டிகளை சிறந்த முறையில் ஏற்பாடு செய்து வெற்றிகரமாக நிகழ்வையும் நடாத்துவதற்கு எதிரொலி விளையாட்டு கழகத்தின் தலைவர் எஸ்.அஜித் செயலாளர் எஸ்.துசாந்தன் பொருளாளர் ரீ.துசியந்தன் உட்பட அணியின் ஆலோசகர்கள் மற்றும் அணி வீரர்கள் அனைவரும் முழுமனதோடு ஒருமித்து செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours