(காரைதீவு சகா)

அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களுக்கிடையிலான விளையாட்டு  விழாவின்  உத்தியோகபூர்வ  ஆரம்ப விழா அம்பாரை செனரத் சோமரத்ன விளையாட்டுத் தொகுதியில் நேற்றுமுன்தினம்(26)இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட  பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கமல் நெத்மினி தலைமையில் தேசியக்கொடியேற்றலுடன் விளையாட்டுப்போட்டிகள் ஆரம்பமாகியது.

உள்ளுராட்சி சபைகளில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் இப்போட்டிகளில் பங்கேற்றனர்.

இதில்,  திருகோணமலை மாவட்ட  பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் லக்மால் தென்னக்கோன் ,நகர சபை பிரதேச சபைகளின் தலைவர்கள் ,செயலாளர்கள், உறுப்பினர்கள் ,உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் ,பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours