(காரைதீவு சகா)

அரச ஊழியர்களுக்கிடையிலான ஆக்கத்திறன் போட்டியில் தேசியரீதியில் வீரமுனையைச் சேர்ந்த அருளானந்தம் சுதர்சன் தமிழ்மொழி மூலமான படைப்பில் சிறுவராக்கப்பிரிவில்  முதலாம் இடத்தினை பெற்றுச்சாதனை படைத்துள்ளார்.

கொழும்பு பி.எம்.ஜ.சி.எச்.இல் நடைபெற்ற தேசியவிருதுவழங்கும் விழாவில்  அதற்கான விருது மற்றும் சான்றிதழ், காசோலை என்பன அவருக்கு வழங்கப்பட்டன.

புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் 2021ம் ஆண்டிற்கான அரச ஊழியர்களுக்கான ஆக்கத்திறன் போட்டியில் வெற்றி பெற்ற ஊழியர்களுக்கான விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வானது பிரதமர் மற்றும் புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்  மஹிந்த ராஜபக்ஷ் தலைமையில்   2022.03.23 (புதன்கிழமை) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு  மண்டபத்தில் (பெங்யட் மண்டபம்;) அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற அரச ஊழியர்களின் சிறப்பான பங்குபற்றலுடன் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதில் இலங்கையின் கெரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் தேசபந்து பேராசிரியர் கபில குணவர்த்தன மற்றும் அமைச்சின் உத்தியோகத்தர்கள் பலர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இவ் விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் கவிதை, சிறுகதை, பாடலாக்கம்,சிறுவராக்கம், சிதிரம், நாடகம்  போன்ன போட்டித்துறைகளில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்களும் முதலாமிடம் பெற்றவர்களுக்கான விருது மற்றும் சான்றிதழ்கள், காசோலைகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன. இதில் அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற அரச ஊழியர்கள் பலரும் கலந்து, சிறப்பித்திருந்தனர்.

இந் நிகழ்வில், தமிழ்மொழி மூலமான படைப்பில் சிறுவராக்கப்பிரிவில்  முதலாம் இடத்தினை சம்மாந்துறை பிரதேச வீரமுனைப் பதியைச் சேர்ந்த அருளானந்தம் சுதர்சன் என்பவர் பெற்று அதற்கான விருது மற்றும் சான்றிதழ், காசோலை என்பனவற்றை பெற்றிருந்தார்.

 அன்றைய தினம் இவரது முதலாமிடம் பெற்ற சிறுவர் கவிகளை கலாசார அலுவல்கள் அமைச்சு நூலாக அச்சிட்டு அதனை இலங்கையின் பிரதமர் உட்பட கலந்து கொண்ட அனைத்து அரச ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்தாகும்.

இவர் இதற்கு முன்னரும் சிறுவராக்கம், பாடலாக்கம் போன்ற துறைகளில் தேசிய விருதுகளையும் சான்றிதழ்களையும் பெற்றிருந்தார் என்பதும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் இளங் கலைஞர் விருதினைப் பெற்றிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும் 




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours