(றாசிக் நபாயிஸ்,
சர்ஜூன் லாபீர்)

"நாடும் தேசமும் உலகமும் அவளே” நிலையான எதிர்காலத்திற்காக பால்நிலை சமத்துவம் பேணல் எனும் பேசு பொருளான மகுட வாசகத்தினை
அடிப்படையாகக் கொண்டு இலங்கையில் மகளீர் தினத்தினை கொண்டாடும் இத்தருணத்தில் இத்தினத்தை சிறப்பிக்கும் முகமாககல்முனை பிரதேச  செயலகத்திலும்சர்வதேச மகளீர் தின நிகழ்வு பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம்.பாத்திமா சிபாயாவின் ஒருங்கிணைப்பில் இன்று (மார்ச் -8) பிரதேச செயலாளர் ஜே.லியாகத்  அலி தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.


கல்முனை பிரதேச பெண்களின் ஆக்க நிறைந்த வேலைப்பாடுகள் கொண்ட பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டதுடன் கலை கலாசார நிகழ்வும் இடம் பெற்றது. இதன் போது இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் ஆக்கங்கள் அடங்கிய விஷேட 'முனை மலர்' ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது. கல்முனை பிரதேசத்தில் சிறப்பாக செயற்பட்ட பெண்கள் சிலர் நினைவுச் சின்னம் மற்றும் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள்.

இந்நிகழ்வுக்குபிரதம அதிதியாக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட தாவரவியல் பேராசிரியரும் தர மதீப்பீட்டிற்கான  மையத்தின்பணிப்பாளருமான  எம்.ஜ.எஸ்.சபீனா, 
நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம். றம்சான் , சமூர்த்தி தலைமைப்பீட 
முகாமையாளர்ஏ.ஆர்.எம்.சாலீஹ், கிராம நிர்வாக உத்தியோகத்தர் 
யூ.எல்.பதியூத்தீன், மருதமுனை சமுர்த்தி வங்கி முகாமையாளர் ஏ.எல்.எம்.நஜீப்,கேப்சோ நிறுவன பணிப்பாளர் 
ஏ.ஜே.காமில் இம்டாட், மருதமுனை பறக்கத் டெக்ஸ் முகாமைத்துவப் பணிப்பாளர் அல்-ஹாஜ் எம்.ஜ.ஏ.பரீட், கிராமிய மகளீர் சங்க உறுப்பினர்கள், மற்றும் மகளீர் கலை இலக்கிய வட்ட உறுப்பினர்கள்
என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours