(சுமன்)



தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீ சபாரெத்தினம் அவர்களின் ஞாபகார்த்தமாக மட்டக்களப்பு மண்முனை தென்எருவில் பற்றுப் பிரதேச சபை பிரிவிற்குட்பட்ட களுதாவளை பிரதேசத்தில் பயணிகள் நிழற்குடையொன்று அமைக்கப்பட்டு இன்றைய தினம் மக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டது.

மண்முனை தென்எருவில் பற்றுப் பிரதேச சபைத் தவிசாளரும் ரெலோவின் மத்திய குழு உறுப்பினருமான ஞா.யோகநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், கட்சியின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினருமான கோ.கருணாகரம் ஜனா, உபதலைவர் இந்திரகுமார் பிரசன்னா, மட்டக்களப்பு மாநகரசபைப் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், களுதாவளை தேசியப் பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள், மாநகரசபை மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

களுதாவளை தேசியப் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிரதேச மக்களின் நன்மை கருதி அவர்கள் பயன்பெறும் வகையில் களுதாவளை தேசியப் பாடசாலைக்கு அருகாமையில் இப் பயணிகள் நிழற்குடை கட்சியின் சுவிஸ் கிளையின் நிதியுதவியில் அமைக்கப்பட்டு இன்றைய தினம் அவர்களுக்கு பயனளிக்கும் முகமாகத் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours