(சா.நடனசபேசன்)


அம்பாரை மாவட்டவிபுலானந்தப் புனர்வாழ்வுக்கழகமும் ஏடு  (AEDU)ADVRO&AEDU)mikg;Gk; (UK)  இணைந்து மட்டு அம்பாரை மாவட்டத்தினைச் சேர்ந்த யுவதிகளின் நலன் கருதி  இலவச தாதியர் பயிற்சிப்  பாடநெறியினை ஆரம்பிக்க  இருப்பதனால் அனைத்து யுவதிகளும் கலந்துகொள்ளமுடியும் என அம்பாரை மாவட்ட விபுலானந்தப் புனர்வாழ்வுக்கழகத்தின் தலைவர் யோகாகலை நிபுணர் கே.சந்திரலிங்கம் தெரிவித்தார்.

இவ் அமைப்பின் நிதி உதவி மூலம் ஒரு வருடகாலத்திற்கு நடாத்தப்படுகின்ற இப் பயிற்சி நெறியில் கலந்துகொள்ள இருப்பவர்களது ஆங்கிலப் புலமையினை விருத்தி செய்வதற்காக  இலவச ஆங்கில வகுப்புக்கள் ஏப்ரல் 1 ஆம் திகதியில் இருந்து ஆரம்பிக்க இருப்பதுடன் பயிற்சி நெறியில் கலந்துகொள்பவர்களுக்கான போக்குவரத்து வசதி அல்லது போக்குவரத்துக் கொடுப்பனவுக்கான ஒழுங்குகள் செய்துகொடுக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்

இப் பயிற்சி நெறி தொடர்பான மேலதிக தகவல்களை அறிந்து கொள்வதற்கு 0776114482 இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும்


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours