மனைப்பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் உடல், உள ஆரோக்கியத்தின் அவசியம் பற்றி அறிவூட்டல்.


(றாசிக் நபாயிஸ்,
மருதமுனை நிருபர்)

சமுர்த்தி, வதிவிடப் பொருளாதார நுண்நிதிய சுயதொழில் மற்றும் வியாபார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் உளவளத்துணை பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட மனைப்பொருளாதாரதை கட்டியெழுப்புவதில் உடல் உள ஆரோக்கியத்தின் அவசியம் என்ற தொனிப்பொருளிலான அறிவூட்டல் நிகழ்வு காரைதீவு பிரதேச செயலாளர் திரு.எஸ். ஜெகராஜன் தலைமையில்
காரைதீவு 12ல் அமைந்துள்ள பல்தேவைக் கட்டிடத்தில் இடம் பெற்றது.

காரைதீவு பிரதேச செயலகத்தின் காரைதீவு 09, 10, 11, 12ஆகிய கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட செளபாக்கியா நிகழ்ச்சித் திட்டத்தின் பயனாளிகளாக 50க்கு மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டனர். 

இதன் போது உளநலம் என்றால் என்ன? உடல், உள நலத்தின் முக்கியத்துவம், ஆரோக்கியமும் மனைப்பொருளாதாரமும், உளப் பிரச்சினைகளின் போது உதவி பெறக்கூடிய நபர்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பான விடயங்கள் பேசப்பட்டது.

இந்நிகழ்வில்
காரைதீவு சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் திரு.அச்சி முஹம்மட், காரைதீவு பிரதேச செயலகத்தின் உளவளத்துணை உத்தியோகத்தர்களான திருமதி பாத்திமா பர்ஸானா, திரு.முஹம்மட் ஹப்றத், பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் திருமதி சர்பின், காரைதீவு 12 சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு
நாகலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். 


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours