தினகரன் பத்திரிகையின் அம்பாரை மாவட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் இ.நடராஜன் இன்று (20) திகதி ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அம்பாரை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு - பனங்காட்டைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான இரத்தினம் நடராஜன் தனது 64 வயதில் காலமாகியுள்ளார்.
திடீர் சுகயீனம் காரணமாக அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 6 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையிலே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தினகரன் பத்திரிகையில் பல வருட காலமாக, பனங்காடு நிருபர் எனும் பெயரில் எழுதி வந்த இவர் 1980 முதல் வீரகேசரியில் பொத்துவில் நிருபராகவும் கடமையாற்றியதுடன் உதயன், வலம்புரி, தமிழ்மிரர், தமிழ்தந்தி, மெட்ரோ, தினப்புயல், பீபீசி தமிழ் வானொலி, தமிழன் போன்ற ஊடகங்களில் சுதந்திர ஊடகவியலாளராக கடமையாற்றியுள்ளார்.
அன்னாரின் நல்லடக்கம் நாளை (21) திகதி பி.ப 4.00 மணிக்கு பனங்காடு இந்து மயானத்தில் இடம்பெறவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours