( எம்.ஏ.அஹ்ஸன் அக்தர்)
திருகோணமலை - கந்தளாய், போட்டன்காடு சந்தியில் கடந்த வியாளக்கிழமை இரவு மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் வான் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் காயமடைந்து கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் கந்தளாய் போட்டன்காடு சந்தியில் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இடத்திலேயே இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post A Comment:
0 comments so far,add yours