(காரைதீவு சகா)
தரம்5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் சம்மாந்துறை வலயத்திலலுள்ள பின்தங்கிய நாவிதன்வெளிக்கோட்டத்திலுள்ள நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயத்தில்(தேசியபாடசா லை) வரலாற்றில் முதல்தடவையாக ஆறு மாணவர் வெட்டுப்புள்ளிக்குமேல் பெற்றுசாதனை படைத்துள்ளதாக அதிபர் சீ.பாலசிங்கன் தெரிவித்தார்.
மணிவண்ணன் சர்ஜனா-173 ,தர்மசீலன் டிலிக்கா -166, மனோரஞ்சன் குவேஜா -161 ,மகேஸ்வரன் நர்மிதா-159, சுபோதன் தனுஸ்கன் - 149 ,புஸ்பராஜா பதினேஸ் 148 ஆகிய மாணவர்களே வெட்டுப்புள்ளிக்குமேல் பெற்று சித்திபெற்றவர்களாவர்.
தரம்5 ஆசிரியர் வி.ரதிதேவன் மிகுந்த முயற்சியெடுத்து கொரோனாக்காலகட்டத்தில்கூட மாணவர்களை அழைத்து பயிற்சி வழங்கி அர்ப்பணிப்புடன் கற்பித்ததாக பிரதிஅதிபர் திருமதி நிலந்தினி ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
இறுதியாக கடந்த 2020புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய 5மாணவர்கள் சித்திபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours