(சுமன்)
தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவின் மட்டக்களப்பு மாவட்ட செயற்குழு உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் இன்றைய தினம் தமிழீழ விடுதலை இயக்கத்தின் மாவட்டப் பணிமனையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தலைமையில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், கட்சியின் உபதலைவரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதித் தவிசாளருமான இந்திரகுமார் பிரசன்னா, கட்சியின் ஊடகப் பேச்சாரளர் சுரேன் குருசுவாமி, மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன் உள்;ளிட்ட டெலோ கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாநகரசபை உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours