(-க.விஜயரெத்தினம்)


நுவரெலியா மாவட்ட பிரதேச செயலக அதிகரிப்புக்கு நியாயம்கோரிய "கையெழுத்து இயக்கமானது" கிழக்கு முதல் மேற்குவரையுமுள்ள பொதுமக்களிடமும்,சகல அரசியல் பிரமுகர்களிடம் இன்று செவ்வாய்கிழமை முதல் எதிர்வரும் சனிக்கிழமை(மார்ச் 1முதல்-5)வரை தங்களின் கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையில் கையெழுத்து சேகரிக்கும் வேலைத்திட்டத்தை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்றையதினம் ஆரம்பித்து வைத்தார்கள்.

மலையக அரசியல் அரங்கத்தின் தவிசாளரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் தலைமையிலான குழுவினரே இன்றையதினம் காலை காந்திபூங்காவில் காலை 10.00 மணியளவில் கையெழுத்திட்டு,கோசம் எழுப்பி ஆரம்பித்து வைத்தார்கள்.


மலைய அரசியல் அரங்கத்தின் தவிசாளரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் தலைமையிலான குழுவினர்கள் கையெழுத்து சேகரிக்கும் வேலைத்திட்டத்தை இன்றையதினம் மட்டக்களப்பு நகரில் காலையிலும்,மாலை அக்கரைப்பற்று நகரிலும்,நாளை பதுளை மாவட்டத்திலும் முன்னெடுக்கவுள்ளதாக நுவரேலியா மாவட்ட பிரதேச செயலக அதிகரிப்புக்கு நியாயம்கோரிய கையெழுத்து இயக்கத்தின் பொறுப்பாளரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் தெரிவித்தார்.

இதற்கு வலுச்சேர்க்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம்,சி.சந்திரகாந்தன் ,மாவட்ட 

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.எம்.அமீரலி,ஞா.ஸ்ரீநேசன் ,சமூக ஆர்வலர்கள்,உட்பட பலர் கையொப்பம்  இட்டுள்ளதுடன் நகரில் உள்ள பொதுமக்களிடமும் கையொப்பம் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours