சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட நாவிதன்வெளி கோட்டத்தின் அதிகஸ்டப் பாடசாலையான சொறிக்கல்முனை ஹோலிக்குறோஸ் மகா வித்தியாலயத்தில் வெளியான புலமைப் பரிசில் பரீட்சையில் ஏழு மாணவர்கள் சித்தி அடைந்துள்ளதாக பாடசாலை அதிபர் அருட்சகோதரி எம்.சிறியபுஸ்பம் தெரிவித்தார்.

குகதீஸ் பிரித்திக்கா168 அந்தோனி றெகான் 163இ சகாயம் சந்துஸ் 162 அருளம்பலம் டினோசன் 153இ ரஞ்சித் சஞ்சை 152 எல்மோ தியாகராஜா ஜெயறியான்சன் 147 நிக்சன் காசினி 147 ஆகிய ஏழு மாணவர்களும் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர். 

இம்முறை பாடசாலையில் 32 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றி பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக 07 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் சித்தி பெற்றதுடன்இ  கடந்த வருடங்களில் புலமைப்பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளுக்கு மேல் சித்திபெற்று மூன்றாவது தடவையாகவும் சித்தியடைந்தோர் எண்ணிக்கை 100வீதமாக  பாடசாலை தக்க வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பாடசாலைக்கும்இ சமூகத்திற்கு நற்பெயரை ஈட்டிய மாணவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்ததுடன்இ  இம்மாணவர்கள் சிறந்த பெறுபேற்றைப் பெற அயராது பாடுபட்ட ஆசிரியர் எஸ்.லோகேஸ்வரன் மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு உதவிய அணைவருக்கும் நன்றிதெரிவித்துள்ளார்



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours