சா.நடனசபேசன்,சுதாகரன்,சுமண்

ஊடகவியலாளர் தாக்கப்பட்டமையினை கண்டித்தும் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறையினை கண்டித்தும்   ஆம்திகதி  சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் மட்டக்களப்பில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபி முன்பாக  கவன ஈர்ப்பு போராட்டம்

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மட்டு.ஊடக அமையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில்  அதன் தலைவர் பா. கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெற்றது.


போராட்டத்தில் மட்டு மாவட்ட. பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரன் இமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன்இ பா.அரியநேந்திரன் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரகுமார்இ இரா.துரைரெட்ணம் இமட்டு மாநகர மேயர் சரவணன் உட்பட புத்திஜீவிகள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.


இதன் போது பல்வேறு கோரிக்கையினை முன்வைத்து ஆர்பாட்டம் இடம்பெற்றதுடன் மக்கள் பிரதிநிதிகள் தங்களது ஆதங்களைத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது










Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours