(அஸ்லம் எஸ்.மௌலானா)
இதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று அமைப்பின் மஷூரா குழுத் தலைவர் அல்ஹாபிழ் எம்.இர்பான் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும் கல்முனை மாநகர பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல்லை நட்டி வைத்தார்.
அத்துடன் சம்மாந்துறை பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர் ஏ.காதர், நீர்ப்பாசன தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.யாகூப் உட்பட பலாஹ் பள்ளிவாசல் நிர்வாகத்தினர், சிவில் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இப்பிரதேச பொது மக்களின் நீண்ட காலத் தேவையாக இருந்து வருகின்ற இப்பாலத்தை அமைத்துத் தருவதற்கு நடவடிக்கை எடுத்தமைக்காக ரஹ்மத் மன்சூருக்கு இதன்போது நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டதுடன் விசேட துஆப் பிரார்த்தனையும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த மேம்பாலம் அமைக்கப்படுவதன் பயனாக பாடசாலை, பள்ளிவாசல் மற்றும் மையவாடி உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் மாணவர்கள் உட்பட பொது மக்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கி வருகின்ற அசௌகரியங்கள் நிவர்த்தி செய்யப்படும் என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
இத்திட்டத்திற்கு வை.டபிள்யூ.எம்.ஏ. நிறுவனம் முழுமையான அனுசரணை வழங்கி வருவதாகவும் குறுகிய காலத்தினுள் மேம்பால நிர்மாண வேலைகள் பூர்த்தி செய்யப்படும் எனவும் ரஹ்மத் பவுண்டேஷன் ஸ்தாபகத் தலைவர் ரஹ்மத் மன்சூர் இதன்போது தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours