( அஸ்ஹர் இப்றாஹிம்)
மேன்மைதாங்கிய ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்க்ஷ அவர்களின் நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு - அனைவருக்கும் "சுத்தமான குடிநீர்" எனும் தூரநோக்கு சிந்தனையின் மூலம் 2025ம் ஆண்டின் இறுதிக்குள் அனைவருக்கும் சுத்தமான நீரை வழங்குவதை அடிப்படையாக கொண்டு மாங்குளம்,ஒலுமடு, தச்சடம்பண் ஆகிய மூன்று கிராம சேவையாளர் பிரிவை உள்ளடக்கிய 3600 பயனாளிகளுக்கு சுத்தமான குடிநீர் தேவையை நிவர்த்தி செய்யும் தூரநோக்கு சிந்தனையில் 2518 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட இருக்கின்ற முல்லைத்தீவு மாங்குளம் நீர்வழங்கள் திட்டத்திற்கான அடிக்கல் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான காதர் மஸ்தான் அவர்களினால் நாட்டி வைக்கப்பட்டு வேலைத்திட்டங்கள் உத்தியோகப்பூர்வமாக அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன், நீர்வழங்கல் அமைச்சின் உயரதிகாரிகள், தேசிய நீர்வழங்கல் சபையின் பொது முகாமையாளர், பிரதி முகாமையாளர், பொறியியலாளர்கள் உள்ளிட்ட திணைக்கள தலைவர்கள் பலரும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours