(காரைதீவு  நிருபர் சகா)

 இந்தியாவின் பிரபலமான நடன ஆசிரியை கலா மாஸ்டர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

 இலங்கையில் அவர் 6 நாட்கள் தங்கியிருந்து பல இடங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளார். அவருடன் அவரது கணவர் உட்பட குடும்பத்தினர் வந்திருக்கின்றார்கள்.

 நேற்று (3)அவர் வவுனியா பொலநறுவை போன்ற இடங்களுக்கும் விஜயம் செய்து பார்வையிட்டுள்ளார்.

 அவர் தாஜ் சமுத்திரா ஹோட்டலில் கலந்துகொண்ட முதல் (3)சந்திப்பில் அவரது இணைப்பாளர் சாதினி அவர்களோடு ஒரு வார கால பயணம் தொடர்பாக கலந்துரையாடினார்.
 விரைவில் அவர் மட்டக்களப்பு யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளுக்கும் விஜயம் செய்யவிருக்கிறார்.

 நேற்று (4)அவருடன் தொடர்பு கொண்டு பேசிய பொழுது இலங்கைக்கு விஜயம் செய்ததமை மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார்.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours