( காரைதீவு   சகா)


கல்முனை மாநகரசபையின் புதிய ஆணையாளராக, கிழக்கு மாகாண மேலதிக மாகாண கல்வி பணிப்பாளர் எந்திரி என்.சிவலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை நிருவாக சேவை தரம் 1 அதிகாரியான அவர் இன்று (16) புதன் கிழமை பதவியேற்கவிருக்கிறார்.

 முன்னாள் ஆணையாளர் ஊழல் குற்றச்சாட்டுகளின் காரணமாக விசாரணை க்கு உட்படுத்தப்பட்டிருப்பதால் அவ்விடத்தை நிரப்புவதற்காக, காரைதீவைச்சேர்ந்த எந்திரி என்.சிவலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்முனை மாநகரநபையின் ஆணையாளர் எம்.சி.அன்சார் மாற்றம் பெற்றதன் காரணமாக அவ்விடத்திற்கு நியமனம் பெற்றுள்ள புதிய ஆணையாளர் பொறியியலாளர் என்.சிவலிங்கம் அவர்களை வரவேற்க மக்கள் காத்துள்ளனர்.

கல்முனை மாநகரசபை வரலாற்றில்  ஆணையாளராகப் பதவியேற்கும் முதல் தமிழ்  அதிகாரி என்.சிவலிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்முனை மாநகரசபையானது அம்பாறை மாவட்டத்தில் மிகப் பிரதானமான சபையாகத் திகழ்கின்றது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours