( அஸ்ஹர் இப்றாஹிம்)

சாய்ந்தமருது கிரிக்கட் சம்மேளனம் ஒழுங்கு செய்து நடாத்திக் கொண்டிருக்கும் 15 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கடின பந்து கிறிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியும் பரிசளிப்பு விழாவும் இன்று   சாய்ந்தமருது பொலிவேரியன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளையும் சேரந்த 32 விளையாட்டுக் கழகங்கள் பங்கேற்ற மேற்படி சுற்றுப் போட்டி கடந்த 6 மாத காலமாக இடம்பெற்று  வந்த இந்த சுற்றுப் போட்டியின்   இறுதிப் போட்டி சாய்ந்தமருது பிளாஸ்டர்  விளையாட்டுக் கழகத்திற்கும் சம்மாந்துறை விளையாட்டுக் கழகத்திற்கும் இடையில் இடம்பெறவுள்ளது.

சாய்ந்தமருது   கிரிக்கட் சம்மேளனத்தின் தவிசாளர் ஹக்கீம் சரிப்   தலைமையிலும் தலைவர் ரீ.கே.எம்.ஜலீல் மற்றும் செயலாளர் இல்யாஸ் அஸீஸ் ஆகியோரின் நெறிப்படுத்தலிலும்  இடம்பெறவுள்ள மேற்படி நிகழ்விற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளர் றிஸ்லி முஸ்தபா பிரதம அதிதியாகவும் , 

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் , கல்முனை மாநகரசபை பிரதி மேயர்  றஹ்மத் மன்சூர் , டாக்டர் றிஸான் ஜெமீல் , டவுன் ரெவல்ஸ் முகாமைத்து பணிப்பாளர் ஏ.ஜே .எம்.ஜலீல் , லெ் அமானா நிறுவன கணிப்பாளர் ஏ.எல்.எம்.பரீட் , றபீக் கென்ஸ்ரெக்ஸன் பணிப்பாளர் யு.எல்.றபீக் , டெலிகொம் பொறியியலாளர் எஸ்.எம்.ஹலீம் , சமீம்ஸ் லங்கா பணிப்பாளர் ஏ.எம்.சமீம்  ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் , அம்பாறை மாவட்ட கிறிக்கட் கட்டுப்பாட்டு சபை தலைவர் இந்திக நளின் ஜயவிக்ரம , செயலாளர் சிதத் லியனாராய்ச்சி ஓயு்வுபெற்ற மக்கள் வங்கி முகாமையாளர் எம்.எஸ்.எம்.மஸுட் , சுற்றுப்போட்டி தவிசாளர் ஏ.எம்.நளீம் , சொர்ணம் நகை மாளிகை பணிப்பாளர் ஜீ.குணபாலசந்திரன் , ஆகியோர் விசேட அதிதிகளாகவும்
 கலந்து கொள்ளவுள்ளனர்.

இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் கழகத்திறகு 25,000 ரூபா பணப்பரிசும் , சம்பியன் கிண்ணமும் , 2வது இடம்பெறும் கழகத்திற்கு 15,000 ரூபா பணப்பரிசும் வழங்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்,

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours