(அஸ்ஹர் இப்றாஹிம்)


கடந்த பல மாதங்களாக கல்முனை பிரதான பஸ்தரிப்பு நிலைய புனரமைப்பு காரணமாக பஸ் தரிப்பு நிலையத்தில் பஸ்கள் தரிப்பதில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் கடந்த ஓரிரு தினங்களாக மீண்டும் பழையபடி பிரதான பஸ் தரிப்பு நிலையத்திலேயே போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பிலுள்ள நகர அபிவிருத்தி அமைச்சினால் தேசிய ரீதியில் 100 நகரங்களை செழுமைமிகு நகரங்களாக  அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் கல்முனை நகரமும் உள்வாங்கப்பட்டு சுமார் 18.7 மில்லியன் ரூபா செலவில் முதற்கட்ட பணியாக கல்முனை பஸ் நிலைய வளாகம் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

மிக நீண்ட காலமாக சேறும் சகதியுமாக காணப்பட்டு பொதுமக்களின போக்குவரத்துக்கு மிகவும் இடைஞ்சலாக காணப்பட்ட  இந்த பஸ் நிலையம் தற்போது மிகவும் அழகாக காணப்படுகின்றது.

இந்த பஸ் நிலைய புனரமைப்பு காரணமாக கல்முனையிலிருந்து சேவையில் ஈடுபடுகின்ற பஸ்கள் பொலிஸ் விதியிலும் , சந்தாங்கேணி சதுக்கத்திலும் தற்காலிகமாக தரித்து நிற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours