சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்


தற்போது மாற்றவேண்டியது அமைச்சர்களை அல்ல அரசாங்கத்தையும் ஐனாதிபதியையும், பொருளாதாரத்தை பிழையாக வழிநடாத்தும் நிதிஅமைச்சரையுமே என்று அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் 

இவர்கள் மக்களை ஏமாற்றுவதற்காகவே அமைச்சரவையில் சில மாற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். இந்த மாற்றம் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கொவிட் காலத்தில் சுகாதார அமைச்சராக இருந்தவர் வெக்சீன் பெறுவதற்கு முன்னர் தம்மிக பாணியை அருந்தியவர். இன்று ஏழு மணித்தியாலம் மின் துண்டிக்கப்படுகின்ற சந்தர்ப்பத்தில் அவருக்கு மின்சார அமைச்சு வழங்கப்பட்டிருக்கிறது. மீண்டும் ஒரு தம்மிக பாணியை போன்று மின்சாரம் சம்பந்தமான பாணியை அருந்துகின்ற சூழலை உருவாக்குவார்களா? என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்றது.

இரண்டு மூன்று அமைச்சர்களை மாற்றிவிட்டு அந்த கிழமை மாத்திரம் அதை ஊடகங்களில் பரப்புகின்ற நிலையை கொண்டுவந்து மக்களை ஏமாற்றுவதை அரசாங்கம் உடனடியாக நிறுத்தவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours