(சுமன்)
மட்டக்களப்பு மாநகரசபையில் தற்போது ஆட்சி அமைத்திருக்கும் அவையின் 04 வருட பூர்த்தியை சிறப்;பிக்கும் முகமான நிகழ்வு மாநகர ஆணையாளர் என்.மதிவண்ணன் தலைமையில் மாநகர மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்கள, பிரதி ஆணையாளர், கணக்காளர், பொறியிலாளர் நிருவாக உத்தியோகத்தர் உள்ளிட்ட அதிகாரிகள், ஊழியகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது இத்தனை வருடங்கள் தங்கள் அவையின் கீழ் சிறப்பான செயற்பாடுகளை வெளிப்படுத்திய அதிகாரிகள், ஊழிகயர்களுக்கு மாநகர முதல்வர் உள்ளிட்ட சபையினர் நன்றிகளைத் தெரிவித்ததுடன், புதிய ஆணையாளரினால் ஊழியர்களுக்கான நெறிப்படுத்தல்களும் வழங்கப்பட்டது. பின்னர் கட்சி ரீதியாக மாநகரசபை உறுப்பினர்களின் கருத்துகள் பகிரப்பட்டன.
அதனைத் தெடர்ந்து கடந்த 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் மாநகரசபையினால் மேற்கொள்ளப்பட்ட செயற்திட்டங்கள் அடங்கிய மாநகரம் என்னும் நூலும் மாநகர முதல்வரினால் வெளியிட்டு வைக்கப்பட்டது. இதன் முதற்பிரதியை மாநகரசபையின் புதிய ஆணையாளருக்கு வழங்கி வைத்ததுடன், அனைத்து உறுப்பினர்களுக்குக்கும் இப் புத்தகம் வழங்கிவைக்கப்பட்டது.
நிகழ்வின் இறுதியில் 04 வருட பூர்த்தியின் ஞாபகார்த்தமாக மரக்கன்று நடும் நிகழ்வு மாநகர வளாகத்தில் இடம்பெற்றிருந்தது.
2018ம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் 2018.04.05ம் திகதி மட்டக்களப்பு மாநகரசபையினைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமையிலான புதிய சபையானது பொறுப்பேற்று தற்பொது 04 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours