(காரைதீவு  நிருபர் சகா)

எரிவாயுவைப் பெறுவதற்காக 16மணிநேரம் காத்திருந்து ஏமாந்து திரும்பியுள்ள துக்கமான சம்பவம் சனிக்கிழமையன்று காரைதீவில் இடம்பெற்றுள்ளது.

காரைதீவு விபுலாநந்த மைதானத்தில் கடந்த இரண்டு நனி தினங்களில் எரிவாயு பொதுமக்களுக்கு சழங்கப்பட்டிருந்தது. அதுபோல நேற்றுமுன்தினம் சனிக்கிழமையும் வழங்கப்படும் என்ற சிந்தனையில் அதிகாலை 4மணிமுதல் மக்கள் சிலிண்டரோடு காத்திருந்தனர்.

நண்பகல் ஆகியும் உரிவாயு கிடைக்கவில்லை. எனினும் எரிபொருள் கிடைக்கும் என்ற நப்பாசையில் வெயிலிலும் மழையிலும் கால்கடுக்க காத்திருந்தனர்.

பிற்பகலில் அங்கு பிரதேச செயலாளர் தவிசாளர் ஆகியோர் மைதானத்திற்கு வேறு ஒரு நிகழ்விற்காக வருகைதந்திருந்தனர். காத்திருந்த மக்கள் அவர்களிடம் முறையிட்டனர். அவர்களோ அதற்கும் எமக்கும் எதுவித சம்பந்தமுமில்லை என்று பதிலளித்தனர்.

எகிகும் மக்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு மாலை வரை காத்திருந்தனர் மாலை 6மணியளவில் சோவென மழை பெய்ய ஆரம்பித்ததும் மக்கள் வேறுவழியின்றி திட்டித்தீர்த்து கொள்கலன்களோடு ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

எரிவாயு விற்பனைப்பிரதிநிதிகள் அவர்களுக்கான பதிலை ஏலவே கூறியிருக்கலாம். அது தமிழ்ப்பிரதேசம் என்பதால் இந்த பாகுபாட்டைக்காட்டுகிறார்களா? என்றெல்லாம் அங்கு நின்றவர்கள் அரசாங்கத்தையும் அதிகாரிகளையும் முகவர்களையும் திட்டித்தீர்த்தார்கள்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours