லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, சகல விதமான பெட்ரோல் வகைகளின் விலைகளும் 35 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.மேலும்,சகல விதமான டீசல் வகைகளின் விலைகள் 75 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.
இந்த விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, பெட்ரோல் 92 - 338 ரூபாவாகும், பெட்ரோல் 95 - 367 ரூபாவாகும்,பெட்ரோல் யூரோ 3 - 347 ரூபாவாகும்,ஓட்டோ டீசல்- 289 ரூபாவாகும், சூப்பர் டீசல் - 327 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours