(க.விஜயரெத்தினம்)

துறைநீலாவணையில் கோழிக்கழிவுகள் அதிரடியாக வீச்சு.கோழிக்கழிவுகளை கொண்டுவந்த  இருவரையும் துறைநீலாவணை சேர்ந்த இளைஞர் குழாத்தினர்,பொதுமக்கள் மடக்கி பிடித்து எச்சரித்து விரட்டித்துள்ளார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 

துறைநீலாவணைக்குச் செல்லும் பிரதான வீதியில்  சனிக்கிழமை (16)காலை 10.15 மணியளவில் மருதமுனையைச் சேர்ந்த இருவர் அறுக்கப்பட்ட கோழிகளின் கழிவுகளை பொலித்தீன் பைகளில் இட்டு அதனை சூட்சுமமாக  ஏற்றிக்கொண்டு  முச்சக்கர வண்டியில் துறைநீலாவணை பாதையில் அதிரடியாக வீசினார்கள்.

இவர்களை பின்தொடர்ந்த துறைநீலாவணை சேர்ந்த இளைஞர் குழாம்,பொதுமக்கள் ஒன்றிணைந்து பின்தொடர்ந்து கையும் மெய்யுமாக பிடித்துள்ளதுடன் அவர்களை இனிமேல்வீசக்கூடாது என எச்சரித்துள்ளதுடன் இருவரையும் கொண்டு வந்த கழிவுகளை மீண்டும் முச்சக்கரவண்டியில் தூக்கி அனுப்பியுள்ளதுடன் எதிர்வரும் காலங்களில் துறைநீலாவணை பாதையில் கோழிக்கழிவுகளையோ அல்லது இறைச்சிக்காக வெட்டப்படும் கழிவுகளையோ அல்லது வேறு கழிவுப்பொருட்களை  வீசினால் நீங்கதான் பொறுப்பென்றும்,தங்களுக்கு எதிராக பாராபட்சமின்றி நடவடிக்கை எடுப்போம் என இளைஞர் குழாத்தினராலும்,பொதுமக்களாலும் எச்சரித்து அனுப்பியுள்ளார்கள்.

இவ்விடயமாக பிரதேசத்திற்கு பொறுப்பான களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி,களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர்,களுதாவளை பிரதேச சபை தவிசாளர் மற்றும் செயலாளர்,துறைநீலாவணைக்கான பிரதேச சபை உறுப்பினர் ,களுவாஞ்சிகுடி சுற்றாடல் பொறுப்பதிகாரி,துறைநீலாவணை தெற்கிற்கான கிராமசேவையாளர்,பொதுச்சுகாதார பரிசோதகர்  போன்றோருக்கு தொலைபேசி மூலம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு  தகவல்களை எட்டி வைக்கப்படது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours