கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோப்பாவெளி பிரதான வீதியில் இடம் பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற குடும்பஸ்தர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த போத சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவி;த்துள்ளனர்.கொம்மாதுரை பிரதேசத்தைச் சேர்ந்த (44) வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான தனபாலசிங்கம்-ஜெயக்காந்தன் என்பவரே உயிரிழந்தவராவார்.
கடந்த் (10) ம் திகதி தனது வீட்டிலிருந்து தனது வேலையின் நிமிர்த்தம் கோப்பாவெளி பிரதான வீதியூடாக தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருக்கும் போது எதிர் திசையில் பயணித்த கப் ரக வண்டி மோதியதில் சம்பவ இடத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் மட்டக்களப்பு போதனா வைத்திளசாலையி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (26) உயிரிழந்துள்ளதாக பொலிஸாhரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுதலுக்கமைவாக சம்பவ இடத்திற்குச் சென்ற பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்;.நசீர் சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post A Comment:
0 comments so far,add yours