மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டுக்களில் பங்குபற்றி வெற்றியீட்டிய விளையாட்டு வீர, வீராங்கனைகளின் தரவுகள் மாவட்ட செயலகத்தினால் கோரப்படுகின்றது!!


மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து சர்வதேசமட்டங்களில் பங்குபற்றிய மற்றும் தேசிய விளையாட்டுக்களில் பங்குபற்றி வெற்றியீட்டிய விளையாட்டு வீர, வீராங்கனைகளின் தரவுகளை ஆவணப்படுத்துவதற்கான விண்ணப்பங்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் கோரப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கே.கருணாகரன் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக மேற்படி விளையாட்டு வீர, வீராங்கனைகளின் விபரங்கள் கீழ் வரும் பிரிவுகளின் அடிப்படையில் ஆவணப்படுத்தும் நோக்கில கோரப்படுகின்றது.

1. 1990ம் ஆண்டிலிருந்து சர்வதேச மட்டத்தில் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சின் (Under Ministry) அனுமதியுடன் பங்கு பற்றிய போட்டிகள் அல்லது இலங்கை தேசிய அணிசார்பாக (Under Federation) பங்குபற்றிய (தனிஅல்லது குழு) விளையாட்டு நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக பங்குபற்றியவர்கள் மற்றும் வெற்றியீட்டியவர்கள்.
2. 1990ம் ஆண்டிலிருந்து இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சினால் நடாத்தப்பட்ட தேசிய விளையாட்டு விழாவில்  (National Sports Festival)  முறையே 1ம், 2ம், 3ம் இடங்களை பெற்றுக்கொண்டவர்கள்.
மேற்படி விண்ணப்பங்களை ஏ4 தாளில் தயாரித்து உரியசான்றிதழ்களின் பிரதிகளுடன் தங்களது பிரிவு விளையாட்டு உத்தியோகத்தர் ஊடாக பிரதேச செயலகத்திலோ அல்லது மட்டக்களப்பு மாவட்ட செயலக
விளையாட்டுப் பிரிவிலோ தபால் மூலமோ அல்லது நேரடியாகவோ எதிர்வரும் 25.04.2022ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பத்தினை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

விண்ணப்பப் படிவத்தின் மாதிரி இணைக்கப்பட்டுள்ளது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours