(காரைதீவு  நிருபர் சகா)

காரைதீவு விபுலானந்த மொன்டிசேரி முன்பள்ளிப் பாடசாலையின் 24ஆவது வருடாந்த விபுல விண்மணிகளின் விடுகைவிழா பாடசாலையின் பணிப்பாளர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா தலைமையில் இ.கி.மி.பெண்கள் பாடசாலையில் நேற்றுமுன்தினம் (9) நடைபெற்றது.

அன்புகூர் அதிதியாக  அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் கலந்து சிறப்பித்தார்.

ஆளுமைசார் அதிதிகளாக காரைதீவு பிரதேசசபையின் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் ,பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன், பொலநறுவை மாவட்ட செயலக பிரதம கணக்காளர் சிவசுந்தரம் சசிகரன் ,சிரேஸ்ட விவசாய போதனாசிரியர் இராஜநாயகம் விஜயராகவன் ஆகியோர் கலந்துசிறப்பித்தனர்.

மொன்டிசோரியில் பயின்று தரம்5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற ஆ.கபிஷேக், ர.ஷஸ்விகா,ப.கிருத்திகன் ,ஜெ.ஆரபி, ச.குகேஸ்,அ.அர்ச்சிகாயினி ,ஹ.சிமேஹரினி ,சு.மேனுஜா, பு.ஜஷ்விகள் ,ரகு.தசாப்தனா, ச.மேனிஷா ,கி.கவின்யா, ஆ.கேதுஷன் ,சு.தரிஷ்ணவி ,சி.நிதஸ்கா, ரு.வர்ஜனா, ச.பேமரெட்சன் ஆகிய 17 புலமையாளர்கள் தங்கப்பதக்கம்  நினைவுச்சின்னம்  வழங்கி பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.

விடுகைபெறும் மாணவர்களான பி.மதுபாஷினி, மோ.அபிஸ்னா ,ர.மினிஸ்கா ,வி.தேஜஸ்விகா ,ஜெ.வேணுக்ஷா, பி.கரேஸ்னா ,கி.ஸங்கீர்த்தனா ,கு.கிருத்தியன் ,ந.டினுக்ஷன், கீ.அகீஷ் ஆகியோர் பரிசுகள் வழங்கி சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

சிறுவர்சிறுமியரின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் மேடையேறின. பெற்றோர் சார்பில் கேதீஸ், ரஜி தலைமையிலான குழுவினர் சிறப்பாகச்செயற்பட்டனர்.ஆசிரியைகளான ஜெயநிலாந்தினி ,ரம்யா ஆகியோர் பாராட்டப்பட்டனர்









Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours