ஸ்ரீலங்கா பென் கிளப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அவரி அவிழ்கை விழா (சஞ்சிகை வெளியீட்டு விழா) நாளை (16) திங்கட்கிழமை பிற்பகல் 4 மணிக்கு சூம் தொழில்நுட்பத்தின் வாயிலாக இடம்பெறும்.
ஸ்ரீலங்கா பென் கிளப்பின் தலைவி சம்மாந்துறை மஷூறா தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வுக்கு சாகித்திய மண்டல பரிசு பெற்ற மூத்த எழுத்தாளரும் இலக்கிய செயற்பாட்டாளருமான மேமன் கவி பிரதம அதிதியாகக் கலந்து கொள்கிறார்.
விஷேட அதிதியாக பிரபல கவிஞரும் ஒலிபரப்பாளருமான அஷ்ரப் சிஹாப்தீன் மற்றும் ஊடக அதிதிகளாக சிரேஷ்ட ஊடகவியலாளரும் சட்டத்தரணியுமான ரஷீட் எம். இம்தியாஸ், லேக்ஹவுஸ் மற்றும் வசந்தம் தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் அஷ்ரப் ஏ. சமட் ஆகியோரும் கௌரவ அதிதிகளாக பாவேந்தல் பாலமுனை பாறூக், அம்பாறை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபீக், அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி.எல்.றின்ஸான், கல்முனை பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் சா.சிவஜோதி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா பென் கிளப்பின் துணைச் செயலாளர் ஷாமென் நிஸாம்டீன் வரவேற்புரையையும் அவரி பற்றிய அவதானத்தை கலாநிதி முகம்மட் மஜீத் மஸ்ரூபாவும் அவரி பற்றிய ரசனைக் குறிப்பை கவிஞர் முல்லை முஸ்ரிபாவும் வழங்குகின்றனர்.
நன்றியுரையை கிளப்பின் பொதுச்செயலாளர் ஜெஸீமா முஜீப், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பையும் தொகுப்பையும் கிளப்பின் உபதலைவர் மர்ழியா சக்காப் மற்றும் கிளப்பின் இணைப்பாளர் லைலா அக்ஷியா ஆகியோர் வழங்குகின்றனர்.
நிகழ்வில் இணைந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும் கீழ் கொடுக்கப்பட்டுள்ள சூம் இணைப்பின் வாயிலாக இணைந்து கொள்ள முடியும் என ஏற்பாட்டு குழுவினரால் திறந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இணைந்து கொள்ள...
Join Zoom Meeting
Meeting ID: 832 6611 9933
Passcode: avary

Post A Comment:
0 comments so far,add yours