நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நாளை (14) காலை 6 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாளை மாலை 6 மணி முதல் நாளை மறுதினம் (15) காலை 5 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியினால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதியின்றி பொது வீதி, புகையிரத பாதை, பொது பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது கடற்கரையில் எவரும் தங்குவதற்கு மற்றும் நடமாடுவதற்கு அனுமதி இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours