(காரைதீவு சகா)
மஹா கும்பாபிசேகம் கண்ட வரலாற்றுப்பிரசித்திபெற்ற மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு பல்வேறு கோணங்களிலும் தொண்டாற்றி பணிசெய்து உதவிய அன்பர்களுக்கு ஆலய அன்னதான மண்டபத்தில் பணிநயப்புவிழா வெள்ளியன்று(29) இடம்பெற்றது.
இப்பணிநயப்பு விழா ஆலய அறங்காவலர்சபைத்தலைவர் கி.ஜெயசிறில் தலைமையில் அறங்காவலர்சபை ஆலோசகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜாவின் றெநிப்படுத்தலில் நடைபெற்றது. விழாவிற்கு முதன்மை அதிதியாக இராமகிருஸ்ணமிசனின் மட்டு.மாநில உதவிமுகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராஜ் கலந்து சிறப்பித்தார். ஆன்மீகஅதிதியாக ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் ஆசியுரை வழங்கினார்.
முதலாம்கட்ட பணிநயப்புவிழாவில் ஆலய அறங்காவலர்சபைர் மற்றும் மண்டலாபிசேகபூஜை உபயகாரர்கள் ஆகியோருக்கு இறைநேசர் என்ற பட்டம் வழங்கி பாராட்டுமடல் வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து அதே அன்னதான மண்டபத்தில் அன்னதானம் இடம்பெற்றது.






Post A Comment:
0 comments so far,add yours