செ.பேரின்பராசா


கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள துறைநீலாவணை மகாவித்தியாலய (தேசிய பாடசாலை) மாணவர்களின் நலன் கருதி தமிழ் ஒப் லங்கா உதவும் கரங்கள் அமைப்பின் அனுசரணையில் இடம்பெறவுள்ள இலவச ஆங்கில பாட கல்விக் கருத்தரங்கு இன்று காலை 08.30 மணிக்கு (16.07.2022)  இப் பாடசாலை அதிபர் தி. ஈஸ்வரன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இக் கருத்தரங்கின் வளவாளர்களாக பிரபல ஆங்கில பாட ஆசிரியர்களான ஆ.ரவிச்சந்திரன் திருமதி விமலா ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொள்வர். தமிழ் ஒப் லங்கா தலைவர் எஸ்.இளந்தீபன்.  இவ் அமைப்பின் சர்வதேச நாடுகளுக்கான இணைப்பாளர் ச.கலாதரன் ஆகியோர் அழைப்பு அதிதிகளாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர்

இக் கருத்தரங்கில் பங்குபற்றும் சகல மாணவர்களுக்கும் எதிர்பார்ப்பு வினா. விடைப் பத்திரங்கள் இலவசமாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours