(மண்டூர் ஷமி)



காத்தான்குடி பொலிஸ்பிவிற்குட்பட்ட  செல்வாநகர் ஆரையம்பதி பிரதேசத்தில் இளம் யுவதி ஒருவர் தூக்கிட்டு தொங்கிய நிலையில் நேற்று (29) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். 17 வயதுடைய   பரமானந்தம்-றோஜா இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

முதலைக்குடா கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச்சேர்ந்த குறித்த யுவதி தனது தாய் தந்தையருடன் தென்னம்தோட்டம் ஒன்றினை பராமரித்து வருவதாகவும் தென்னம் தோட்டத்தில் உள்ள மாடி விட்டின் மேல் தனக்குத்தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற்  நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற காத்தான்குடி பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி வேலு மணிமாறன் சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மற்றும் சட்டவைத்திய அதிகாரி அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours