நூருல் ஹுதா உமர்


கல்முனை சமூக மேம்பாட்டுக்கான பழைய மாணவர்கள் செயல் வலையமைப்பின் ஏற்பாட்டில் அமைப்பின் தலைவர் மெளலவி எஸ்.எம்.நிம்ஸாத் (மன்பயி) தலைமையில் மெளலானா மெளலவி அஸ்-செய்யித் எஸ்.எம். மஷ்ஹூர் தங்கள் ஸகாபி ரிபாயி அவர்களின் விஷேட துஆ பிராத்தனையுடனும் ஆசிர்வாதத்திடனும்  உத்தியோகபூர்வ நூலக திறப்புவிழாவும் மர்ஹும்களான  உலமாக்களை நினைவு  கூறல் நிகழ்வும் கல்முனை மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசலில்  மிக சிறப்பாக நடைபெற்றன.

இந்நிகழ்வில் நூலகத்திற்குரிய கிதாபுகளை மெளலானா மெளலவி அஸ்-செய்யித் எஸ்.எம்.மஷ்ஹூர் தங்கள் ஸகாபி ரிபாயி அவர்களின் கரத்தினால் கிதாபுகள் அடுக்கிவைத்து ஆரம்பித்து வைக்கப்பட்டதோடு, நூலக பதிவேட்டில் நினைவு குறிப்பும் பதிவு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து உலமாக்கல், நூல்கள் அன்பளிப்பாளர்கள் மற்றும் நிகழ்வில் கலந்து கொண்டவர்களினால் நூல்கள் அடுக்கிவைக்கப்பட்டதுடன் அமைப்பின் தலைவர் அவர்களினால் அமைப்பின் வளர்ச்சி பற்றியும், எதிர்கால திட்டங்களை செயல்படுத்துவது பற்றியும் உரை நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வில் உலமாக்கள் புத்தீஜீவிகள், பள்ளிவாசல் நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours