(ஷமி மண்டூர்)
ஏறாவூர் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட ஆறுமூகத்தான்குடியிருப்பு பிரதேசத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் நீரில் மூழ்கி சடலமாக இன்று மீட்கப்பட்டுள்தாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆறுமுகத்தான்குடியிருப்பு பிரதேசத்தைச்சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான சின்னத்துரை சிறிதரன் (வயது 50) என்பவரே ஆற்று நீரில் இருந்து சடலமாக மீட்கப்பட்டவராவார்.
வழமை போன்று தனது வீட்டிலிருந்து நேற்று மாலை குறித்த ஆற்றுக்கு தனது தோணியில் மாலை வேளையில் மீன்பிடிக்க சென்றதாகவும் வழமைபோன்று மருநாள் காலையில் வீடு திரும்புவவர் வீடு திரும்பாத நிலையில் அவரின் குடும்பத்தார் ஆற்றுப்பகுதிக்கு சென்று மீனவர்களுடன் இணைந்து தேடுதலில் ஈடுபட்டபோது குறித்த மீனவர் தோணி கவிழ்ந்து ஆற்றில் உள்ள சேற்றில் புதைந்து மரணமடைந்த நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

.jpeg)

Post A Comment:
0 comments so far,add yours