முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின்
75 ஆவது மகாசமாதி நினைவாண்டை முன்னிட்டு,
இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன், காரைதீவு
சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்தப் பணி மன்றம் ,
இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களிடையே டிஜிட்டல் முறையிலான பேச்சு போட்டியை ஏற்பாடு செய்துள்ளது.
இலங்கையிலுள்ள இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான இப்
பேச்சாற்றல், ஆளுமைத்திறன் வெளிக்கொணர்வு போட்டி முதல் தடவையாக டிஜிட்டல் முறையில் நடாத்தப்படவுள்ளது என இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் அருளானந்தம் உமாமகேஸ்வரன் தெரிவித்தார்.
அறநெறி மாணவர்கள் தங்கள் பேச்சுகளை ஒலிப்பதிவு செய்து புலனத்தினூடாக( whatsapp வாட்ஸ்அப்) அனுப்பி வைக்க வேண்டும்.
பேச்சுக்கான தலைப்புகள் பின்வருமாறு..
• பாலர் பிரிவு
“முத்தமிழ்த் தாத்தா விபுலாநந்தர்” - (இரண்டு நிமிடங்களிற்கு மேற்படாது அமைதல் வேண்டும்)
• கீழ்ப்பிரிவு
“விபுலாநந்தர் நமக்காக ஆற்றிய அரும்பணிகள்” - (மூன்று நிமிடங்களிற்கு மேற்படாது அமைதல் வேண்டும்)
• மத்திய பிரிவு
“விபுலாநந்த அடிகள் தமிழ் அன்னையின் செல்லப்பிள்ளை” - (நான்கு நிமிடங்களிற்கு மேற்படாது அமைதல் வேண்டும் )
• மேற்பிரிவு
“முத்தமிழால் நமக்குப் பெருமை சேர்த்தவர் விபுலாநந்த அடிகளார்” - (ஐந்து நிமிடங்களிற்கு மேற்படாது அமைதல் வேண்டும் )
அறநெறிப் பாடசாலைப் பொறுப்பாசிரியர்கள், தங்களின் பொறுப்பில் உள்ள அறநெறிப் பாடசாலை சார்பாக, ஒவ்வொரு பிரிவிலிருந்தும் பொருத்தமான மாணாக்கரைத் தெரிவு செய்து, பேச்சு நிகழ்வுகளை ஒலிப்பதிவு செய்து, 0776569156 எனும் வாட்ஸ்அப் இலக்கத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும்..
அனுப்ப வேண்டிய இறுதித் தினம் – 30.07.2022 ஆகும்.
வெற்றியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்படுவார்கள் என்று பணிப்பாளர் உமாமகேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.
மேலும் பொருத்தமான பேச்சு நிகழ்வுகள் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தென்றல் அலைவரிசையில் இடம்பெற்றுவரும் அறநெறிச்சாரம் நிகழ்விலும் ஒலிபரப்பாகும் .
மேலதிக தொடர்புகளுக்கு .கு.ஜெயராஜி (0779309257)
சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்தப் பணி மன்றம் ,காரைதீவு – அம்பாறை
என்ற விலாசத்துடன் தொடர்பு கொள்ளலாம் என பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்
.jpg)
Post A Comment:
0 comments so far,add yours