ஊஞ்சல் கயிற்றில் சிக்கி சிறுவன் பலி-மட்டக்களப்பில் சம்பவம்
மட்டக்களப்பு தலமையகப் பொலிஸ்பிரிவிற்குட்பட்;ட மட்டக்களப்பு பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சிறுவனொருவர் ஊஞ்சல் கயிற்றில் சிக்குண்டு பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இல-44 பாரதி வீதி மட்டக்களப்பினை சேர்ந்த (11) வதுடைய மதிவாணன் ஜனுசாஷன் என்பவரே இவ்விபத்தில் பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.
சம்பவ தினத்தன்று வீட்டு விறாந்தையில் கட்டப்பட்டு இருந்த கயிற்றில் சிறுவன் ஊஞ்சல் விளையபட்டில் ஈடுபட்டுக்கொணடிருந்ததாகவும் சிறுவனின் தாயார் வீடடு வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் சிறுவனின் சத்தம் எதுவுமில்லாமல் இருத்வேளை தாயார் வெளியில் வந்து பார்த்தபோது குறித்த சிறுவன் ஊஞ்சல் கயிற்றில் சிக்குண்டு காணப்பட்டதாகவும் பின்னர் அயலவர்களின் உதவியுடன் கயிற்றில் இருந்து மீட்டெடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற பதில் நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்ப இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தினை பார்வையிட்டார் பிரேத பிரிசோதனையின் பின்னர் சடலத்தினை உறவினர்களிடம் ஒப்படைககும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Post A Comment:
0 comments so far,add yours