கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்ற மட்டக்களப்பு, அமிர்தகளி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா நேற்று (27) திகதி புதன்கிழமை மிகச்சிறப்பாக இடம்பெற்றதனைத் தொடர்ந்து இன்று (28) திகதி தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.

ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையார் பேராலயத்தின் இவ்வாண்டிற்கான மகோற்சவம் கடந்த (19) திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, இறுதிநாள் பிதிர்கடன் தீர்க்கும் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் ஆலய தீர்த்தக்கேணியில் இன்றைய தினம் (28) திகதி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ மிகச்சிறப்பாக இடம்பெற்றது.

வசந்த மண்டப பூசைகள் இடம்பெற்றதனைத் தொடர்ந்து சுவாமி வெளிவீதி வலம் வருகை தந்ததைத் தொடர்ந்து, நாட்டின் பல பாகங்களிலுமிருந்து வருகைதந்த ஆயிரக்கணக்கான பக்த அடியவர்கள் தீர்த்தமாடி தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றியதுடன், ஆத்ம சாந்தி பிதிர்கடன் தீர்க்கும் பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டிருந்தனர்.






Share To:

Thaayman

Post A Comment:

0 comments so far,add yours