சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்



சம்மாந்துறைப் பிரதேச செயலகத்திற்குற்பட்ட சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே எரிபொருள் கிடைக்கப் பெற உள்ளது. எனவே இதனை எரிசக்தி அமைச்சினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கமைவாக வாகனங்களின் இலக்கத்தகட்டின் இறுதி இலக்கங்களின் அடிப்படையிலேயே விநியோகிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே விநியோக நடவடிக்கையின் போது எரிபொருள் நிரப்ப வருகின்றவர்கள் கட்டாயம் தங்களது 2022ம் ஆண்டிற்கான செல்லுபடியாகும். வாகன புகை பரிசேதனைப் பத்திரத்தினை (Emission test Certificate) கொண்டு வரவேண்டும்.

பின்வரும் ஒழுங்கின் பிரகாரம் எரிபொருள் விநியோகிக்கப்படும்.

0,1,2 - செவ்வாய், மற்றும் சனி
3,4,5 - வியாழன் மற்றும் ஞாயிறு
6,7,8,9 - திங்கள், புதன் மற்றும் வெள்ளி


மேலும் அறுவடை காலம் என்பதால் விவசாயிகளுக்கு தேவையான டீசலினை சிரமம் இல்லாமல் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாட்டினை  சம்மாந்துறை பிரதேச செயலகம், கமநல மத்திய நிலையம்,நீர்ப்பாசன திணைக்களம் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை இணைந்து மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே இத்திட்டம் சிறப்பாக இடம்பெற பொது மக்களினதும் சமூக அமைப்புக்களினதும் ஒத்துழைப்பினை பெரிதும் எதிர்பார்பதாகவும் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனிபா மக்களிடம் வேண்டுகோள் விடுத்தமை மேலும் குறிப்பிடத்தக்கது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours