( காரைதீவு நிருபர் சகா)
நாளை(22) வெள்ளிக்கிழமை திறக்கப்படும் கதிர்காம காட்டுப்பாதையில் பயணிக்கும் பாதயாத்திரை அடியார்களுக்கு குடிநீர் மருத்துவ வசதி மற்றும் நலன்புரி விடயங்களை கவனிப்பதற்கென நிதியுதவி வழங்குமாறு லாகுகலை பிரதேச செயலாளர் என்.நவநீதராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
வழமையாக அரசிடமிருந்து கிடைக்கும் நிதியுதவி இம்முறை இதுவரை கிடையாத காரணத்தினால் பொது அமைப்புகள் தனவந்தர்கள் சமுக சேவையாளரகளிடம்
வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக காட்டுப்பாதை திறக்கப்படவில்லை
ஆதலால் இம்முறை நாளை 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காட்டுப் பாதை திறக்கப்பட இருக்கின்றது .அதன் ஊடாக பல்லாயிரக்கணக்கான பாதயாத்திரை அடியார்கள் பயணம் செய்ய இருக்கின்றார்கள்.
இவர்களுக்கு வழமையாக அம்பாறை அரசாங்க அதிபரிடமிருந்து கிடைக்கும் நிதியுதவி யினால் குறித்த விடையங்களை லாகுகலை பிரதேச செயலகம் செய்து வந்தது தெரிந்ததே.
நாட்டில் நிலவும் சமகால பொருளாதார நெருக்கடி காரணமாக இம்முறை அத்தகைய நிதியை பெற முடியாத சூழல் நிலவுகிறது.
எனவே பாதயாத்திரை குழுவினருக்கு இந்த வசதிகளை வழங்குவதற்காக பொது அமைப்புகள் தலைவர்கள் மற்றும் தனவந்தர்கள் உதவுமாறு அன்போடு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


Post A Comment:
0 comments so far,add yours