(எம். எஸ்.எம்.ஸாகிர்)


கிண்ணியா நடுத்தீவு பிரதேசத்தில் வீடற்ற  தம்பதிக்கான வீடு நேற்று சனிக்கிழமை (23) கையளிக்கப்பட்டது.

வீடற்ற தம்பதிகளுக்கு வீடு கையளிக்கும் திட்டத்தின் ஓர் அங்கமாக கிண்ணியா நடுத்தீவு பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட ஒரு தம்பதிக்கு முற்றுமுழுதாக கட்டி பூரணப்படுத்தப்பட்ட வீடு ஒன்று கையளிக்கப்பட்டது.

அல்-ஹித்மதுல் உம்மா பௌண்டேசனினால் கட்டிக்கொடுக்கப்பட்ட இவ்வீடானது துருக்கி தொண்டு நிறுவனமான IHHNL இன் இலங்கைக்கான தூதுவர் முஸ்தபா குரு கையளித்தார்.

இந்நிகழ்வில், அல் - ஹித்மதுல் உம்மா பௌண்டேசனின் தலைவர் முகம்மட் பாத்திஹ் கஸ்ஸாலியும் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours