( வி.ரி.சகாதேவராஜா))
மொனராகலை அரசாங்க அதிபர் குணதாச சமரசிங்க கதிர்காம காட்டுப் பாதையில் பயணிக்கும் பாதயாத்திரை அடியார்களின் சேமநலன்களை தினமும் பார்வையிட்டு, அவதானித்து உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்.
கள்ளவியாழையிலிருந்து கதிர்காமம் வரைக்குமான குடிநீர் வினியோகம் மற்றும் அன்னதானம் சேமநலன்கள் தொடர்பாக தினமும் ஆராய்ந்து வருகிறார்.
அவ்வப்பொழுது அவதானித்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்.
அந்த வகையில், கள்ள வியாழையில் அமைந்திருக்கின்ற அன்னதான சாலையையும் அவதானித்து அங்கு சோறு உட்பட கறி சமைக்கின்ற விதத்தையும் சுகாதார முறைப்படி உணவு தயாரிக்க படுகின்றதா? என்பதையும் நேரடியாக சுகாதார பரிசோதகர்களோடு பார்வையிட்டு வருகின்றார்.
அன்னதானம் தொடர்பாக அவர் திருப்தி தெரிவித்தார் .
அவருடன் மேலதிக அரசாங்க அதிபர் பிரதீப் குணதிலக,
மற்றும் போலீஸ் அத்தியட்சகர் சுகாதார வைத்திய அதிகாரி உள்ளிட்ட பல உயர்மட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.


Post A Comment:
0 comments so far,add yours