அம்பாறை மாவட்ட தமிழர்களின் அடையாளத்தை இல்லா தொழிக்கவேண்டும் என்பதற்காக 1983 களிலிருந்து தொடர்ச்சியாக திட்டமிட்டு பல படுகொலைகளை செய்துள்ளார்கள். உண்மையில் அது நில ஆக்கிரமிப்பின் மறுவடிவமே. அந்த வகையில் குரூரமாக ஈவிரக்கமின்றி மேற்கொள்ளப்பட்ட திராய்க்கேணி படுகொலைக்கு இன்று 32 வருடங்களாகின்றன.
இவ்வாறு திராய்க்கேணி படுகொலையின் 32 வது வருட நினைவேந்தலின் போது உரையாற்றிய காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார் .
அவர் அங்கு மேலும் கூறுகையில்..
1990களில் ராணுவம் சில முஸ்லிம் இளைஞர்களின் உதவியோடு இங்கு செய்த இந்த குரூர கொலையானது, பரம்பரை பரம்பரையாக தமிழ்மக்களின் மனங்களிலே நினைவு கூறப்படும் .
இந்த பாமர மக்களை கொலை செய்தவர்களையும், எமது இனத்தின் மீது பாரிய அநியாயங்களை செய்தவர்களையும் நாங்கள் மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம்.
நாம் எந்த ஒரு இனத்திற்கோ சாதிக்கோ அநியாயம் செய்ய மாட்டோம். நாங்கள் அவர்களுக்கு எதிரானவர்களும் அல்ல .ஆனால் எமது நிலங்களை சூறையாட வருபவர்களுக்கு எதிராக நாங்கள் தொடர்ச்சியாக போராடுவோம்.
முஸ்லிம் மக்கள் அனைவரும் இதில் சம்மந்தப்பட்டார்கள் என்று கூறவில்லை. ஆனால் ஒரு சில முஸ்லிம் இனவாதிகள் முன்னணியில் இருந்து செய்யப்பட்டதை நேரடியாக கண்ணால் கண்ட திராய்க்கேணி மக்கள் இங்கு பேசுகையில் கூறுகின்றனர்.
6 நாள் குழந்தையை கூட ஆலமரத்தில் அடித்து ஈவிரக்கம் இன்று கொன்றிருக்கின்றார்கள் .
இதுபோல் வீரமுனை ,உடும்பன் குளம் ,நாவிதன்வெளி நீலாவண, காரைதீவு ,பாண்டிருப்பு போன்ற பல இடங்கள் இவர்களின் கைவரிசைக்கு இலக்காகி இருக்கின்றது.
.jpg)
Post A Comment:
0 comments so far,add yours