எரிவாயுவின் விலை குறைக்கப்படுவதாக லிற்றோ நிறுவனம்அறிவித்துள்ளது. 

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் விலை குறைக்கப்படுகின்றது. 

இதன்படி, 12.5 கிலோ கிராம் எடை கொண்ட வீட்டு உபயோகத்திற்கான எரிவாயுவின் விலை 246 ரூபாவினால் குறைக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். 

அத்துடன், 5 கிலோ கிராம் எடை கொண்ட எரிவாயுவின் விலை 99 ரூபாவினால் குறைக்கப்படுகின்றது. 

மேலும், 2.3 கிலோ கிராம் எடை கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்படுகின்றது. 

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours